திருச்சி:தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதற்கான முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், திருச்சி மாமன்றத்தில் 65 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
திமுக சார்பாக 49 பேரும், காங்கிரஸ் சார்பாக ஐந்து பேரும், மதிமுக சார்பாக இரண்டு பேரும், சுயேச்சைகளிலிருந்து இரண்டு பேரும், விசிக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பாக தலா ஒருவரும், அதிமுக சார்பாக மூவரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வுசெய்யப்பட்ட 65 கவுன்சிலர்களில் 51 பேர் புது முகங்கள்.