திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுகாதார ஆய்வாளரை கத்தியால் கையை வெட்டிய மீன் கடை வியாபாரியும், பாமக பிரமுகருமான கவிபிரியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவாரூரில் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், கவிபிரியன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வாயிலில், இன்று மாநகராட்சி அனைத்து அலுவலர், பணியாளர் சங்கம், சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர் சங்கம், தூய்மைப் மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளரை தாக்கியவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - திருச்சி மாவட்ட செய்திகள்
திருச்சி: திருவாரூரில் சுகாதார ஆய்வாளரை வெட்டிய பாமக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுகாதார ஆய்வாளரை தாக்கியவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி அலுவலர் சங்கத் தலைவர் தாமோதரன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி நிர்வாக அலுவலரும், உதவி ஆணையர் சங்கத் தலைவருமான சண்முகம், சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் பொன். தலை விருச்சான், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, பாமக பிரமுகரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, அவரை உடனே கைது செய்யவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: நிவாரண உதவி போதவில்லை: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்