தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - corona relief package distributed at Trichy by tourism minister Vellamandi Natarajan

திருச்சி : ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நலத்திட்ட தொகுப்பினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

திருச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

By

Published : Nov 6, 2020, 4:22 PM IST

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய, பாலக்கரை பகுதிக்கு உள்பட்ட காஜாப்பேட்டை, எடத்தெரு, கீழப்புதூர், ஆலம் தெரு, துரைசாமிபுரம், சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஐந்து கிலோ அரிசி, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் அடங்கிய இந்த நிவாரணத் தொகுப்பினை சுற்றுலாத்துறை அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலருமான வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய வெல்லமண்டி நடராஜன், “கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில், அதிமுக சார்பில் இதுபோன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பாலக்கரை பகுதி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details