தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவெறும்பூரில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ - Trichy news

திருச்சி: சலவை, முடி திருத்தும் தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திருவெறும்பூரில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூரில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : May 22, 2020, 7:19 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் இந்த ஊரடங்கால் நாடு முழுவதுமுள்ள ஏழை, எளிய மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

திருவெறும்பூரில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு, அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலரும் உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதியில் இன்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

திருவெறும்பூர் தொகுதிக்குள்பட்ட காட்டூர், பொன்மலை பகுதிகளில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி பைகளை இன்று அவர் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக பகுதி செயலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:நாடகக் கலைஞர்களுக்கு உதவிய விமல்

ABOUT THE AUTHOR

...view details