தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தை தாண்டுகிறது. வைரஸ் தடுப்புப் பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
திருச்சியில் அதிகரிக்கும் கரோனா: பாதிப்பு 7,158ஆக உயர்வு!
திருச்சி: நேற்று மட்டும் 85 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 158ஆக அதிகரித்துள்ளது.
trichy
அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலும் கரோனா நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 85 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 158ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து 6,129 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 916 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்