தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 834 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 159 ஆகவும் அதிகரித்துள்ளது.
திருச்சியில் இன்று 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி - திருச்சி மாவட்ட செய்திகள்
திருச்சி: இன்று (ஆக.11) ஒரே நாளில் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்று 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி
திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 250ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4 பேர் இன்று உயிரிழந்தனர்.இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 4 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 889 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.