தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் இன்று (ஜூலை19) ஒரே நாளில் 4 ஆயிரத்து 979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,265ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.