தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 29) ஒரே நாளில் 6 ஆயிரத்து 426 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 82 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆகவும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,741 ஆகவும் அதிகரித்துள்ளது.
திருச்சியில் இன்று 136 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா உயிரிழப்பு
திருச்சி: திருச்சியில் இன்று மேலும் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,889ஆக அதிகரித்துள்ளது.
Corona guaranteed for 136 people in Trichy today!
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த123 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,420 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆகவும் உள்ளது.