தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் மேலும் 98 பேருக்கு கரோனா - கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

திருச்சி: திருச்சியில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி
திருச்சி

By

Published : Sep 16, 2020, 6:43 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் 5 ஆயிரத்து 652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆகும். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆகும்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 114ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 15) வரை 870 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 99 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 113 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 867 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details