தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 9) 5 ஆயிரத்து 584 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 ஆகும். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 90 ஆகும்.
திருச்சியில் ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா - கரோனா நோய்த்தொற்று
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 434ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 8) வரை 910 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 90 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 391 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக இன்று ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. தற்போது 913 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.