தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 25) மேலும் 6 ஆயிரத்து 998 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது.