தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா! - கரோனா உயிரிழப்புகள்

திருச்சி: மாவட்டத்தில் ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Corona for 117 people in a single day today in Trichy
Corona for 117 people in a single day today in Trichy

By

Published : Jul 14, 2020, 10:29 PM IST

Updated : Jul 14, 2020, 10:35 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று(ஜூலை14) ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை14) ஒரே நாளில் 117 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியூரைச் சேர்ந்த எட்டு பேர் கரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,715 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியும், ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் இன்று 32 பேருக்கு கரோனா!

Last Updated : Jul 14, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details