தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.
திருச்சியில் இன்று 102 பேருக்கு கரோனா - திருச்சியில் 910 பேர் சிகிச்சை
திருச்சி : திருச்சியில் இன்று (ஆக. 29) 102 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இன்று 102 பேருக்கு கரோனா
அம்மாவட்டத்தில் மொத்தம் 917 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 107 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 236ஆக உயர்ந்துள்ளது.
இன்று இருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 910 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.