மனித உயிர்கள் தொடங்கி, நாட்டின் பொருளாதாரம் வரை, கரோனா தாக்குதல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்தியாவில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 51 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்து, பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
முன்னதாக 19 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று ஐந்து பேர் வீடு திரும்பியுள்ளனர்.