தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: 'தேவையில்லாமல் முகக் கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும்' - மருத்துவர் அறிவுரை - Regional Transport Office

திருச்சி: மணப்பாறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

முகக்கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும்
முகக்கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும்

By

Published : Mar 21, 2020, 12:16 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிநேர வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் தனசேகரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவர் முத்துக் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தலைமை மருத்துவர் முத்துக் கார்த்திக்கேயன் பேசியதாவது;

வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களை தற்காத்துக்கொள்வது மிக முக்கியமாகும். வாகனங்களில் பொருள்களை ஏற்றி இறக்கிய பின் கைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும், வாகனத்தின் மீது தினமும் கிருமிநாசினி தெளித்த பின்னர் வாகனத்தை இயக்கு வேண்டும்.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

பொதுமக்களில் யாருக்கேனும் இருமல், தும்மல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தேவையில்லாமல் முகக் கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும், முடிந்த அளவு கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

இதில் வாகன ஓட்டிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தலைமை மருத்துவரிடம் கரோனா வைரஸ் குறித்த தனது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

இதையும் படிங்க: முகக்கவசம் தயாரிக்க மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குப் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details