திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று (ஆக.24) திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பேரிடர் காலங்களிலும், இயற்கை சீற்றங்கள் என கடந்த 20 வருடங்களாக மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அங்கீகரிக்க மறுத்து வரும் மின்சார வாரியம், தற்போது புதிதாக கேங்மேன் என்ற புதிய பதவியை உருவாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த புதிய பதவியை ரத்து செய்துவிட்டு, அனுபவமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும், தினக்கூலியை அதிகரித்து ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கேங்மேன் பணியிடத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மேலும் ஏராளமான மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: விக்கிரமராஜா