திருச்சியில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும்போது மூன்றாவது மொழியினை திணிக்கக் கூடாது. இது ஒற்றுமை கொண்ட ஜனநாயகத்திற்குப் புறம்பானது. இது ஒரு கலாசாரப் படையெடுப்பு.
'திமுகவின் ஆட்சி மாற்ற முயற்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும்..!' - கே.எஸ்.அழகிரி - undefined
திருச்சி: 'தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றோம். சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ்நாட்டில் அதே நிலைப்பாடு கொண்டு இருப்போம்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயன்றுவருகிறார். அதற்கு 100 விழுக்காடு துணை நிற்போம். தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் தோற்கவில்லை. இளங்கோவன் தோல்வி அடைய தேர்தல் ஆணையத்தின் முறைகேடே காரணம். தேர்தல் ஆணையம் நடைமுறை மீது சந்தேகம் உள்ளது. மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் குறித்து அறிவியல் அறிஞர்கள் கருத்து கேட்டு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கூறினால் அதை தடை செய்ய வேண்டும்" என்றார்.