திருச்சிமாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் கடந்த 17ஆம் தேதி அன்று மன்றத்தில் தியாகி கக்கன் போட்டோ திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வு முடிந்த பின்னர் தியாகி கக்கன் போட்டோவை,காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவஹர் என்பவர் தூக்கி எறிந்து விட்டார். இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்திலும் உடனடியாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி தலையிட்டு மாவட்டத் தலைவர் ஜவஹரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.