தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 6:41 PM IST

ETV Bharat / state

'ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேச கற்றுக் கொள்ளவேண்டும்' - திருநாவுக்கரசர்!

திருச்சி: ராஜேந்திர பாலாஜி அமைச்சராக பேசுவதைக்காட்டிலும் முதலில் மனிதராக நாகரிகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

congress-thirunavukarasar-talks-about-rajendra-balaji

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், 'சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போலவே இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து டெங்கு பாதிப்பு குறித்து ஒப்பீடு செய்யக்கூடாது. அவ்வாறு ஒப்பீடு செய்வது கண்டனத்திற்குரியது.

டெங்கு பாதிப்பை ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். அவர் அமைச்சராக பேசுவதைக்காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும். அவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கவில்லையென்றால் முதலமைச்சார் தான் அவரை இவ்வாறு பேசுவதற்கு ஊக்கப்படுத்துகிறார் என்று மக்கள் எண்ணுவார்கள்.

ஜெயலலிதா ஒரு பிரசாரத்தில் 'அந்த மோடியை விட, இந்த லேடியின் ஆட்சி சிறந்தது' என்று பேசுவது இணையத்தில் உலா வருகிறது. அதற்கு பக்கத்திலேயே ராஜேந்திர பாலாஜி, 'மோடி எங்கள் டாடி... மோடி எங்கள் டாடி' என்று சொல்வதும் வருகிறது.

’ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்’ - திருநாவுக்கரசர்

இதையெல்லாம் பார்த்தாவது அவர் திருந்த வேண்டாமா! எதிர்காலத்திலாவது அவர் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளவேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என நாம் மட்டுமல்ல உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள்... நடைபெறுமா எனப்பொறுத்திருந்து பார்ப்போம்"என்றார்.

இதையும் படிங்க:நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா - அமைச்சர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details