தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதச்சார்பின்மை குறித்துப்பேச காங்கிரசுக்கு தகுதியில்லை - ஜி.கே.வாசன் - Congress does not deserve to talk about secularism

திருச்சி: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என ஜி.கே.வாசன் விமர்சனம்

By

Published : Nov 22, 2019, 6:01 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் பூர்த்திசெய்து 30ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, 'இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த வழியில் உள்ளாட்சி தேர்தலிலும் செயல்படுவோம். ரஜினி, கமல் இணைந்து போட்டியிட்டால் அதற்கு வாக்காளர்கள் முடிவு எடுப்பார்கள். ரஜினி இன்றுவரை கட்சியே ஆரம்பிக்கவில்லை' எனக் கூறினார்.

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என ஜி.கே.வாசன் விமர்சனம்

மேலும், 'ஆட்சி அதிகாரம் என்று வரும்போது கொள்கை பற்றி கவலை இல்லை என்பதை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிரூபித்துள்ளது. இனி மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியையும், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் இழந்துவிட்டது என அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிமுகவே காரணம் - ஜி.கே. வாசன் கருத்து

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details