தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு அமைச்சர் பதவி - துண்டு போடும் திருநாவுக்கரசர் - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

திருச்சி: திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் போது காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

MP Thirunavukkarasar

By

Published : Aug 20, 2019, 8:00 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மக்களவை தொகுதி எம்பி திருநாவுக்கரசர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களையும், பெண்களுக்கு இலவச சேலைகளையும் வழங்கினார்.

ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் எம்பி திருநாவுக்கரசர் பேச்சு

இந்த விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் மக்கள் மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளதாகவும், சாதி, மத வேறுபாடின்றி கிடைக்கப் பெற்றுள்ள இந்த வெற்றிக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 தொகுதிகளுக்கும் சமமாக பிரித்து செலவிடப்படும் என்றும், எம்பியாக பதவியேற்ற ஒன்றரை மாதங்களிலேயே 2 பேருக்கு ரூ.6 லட்சம் வரை பிரதமர் நிவாரண நிதியிலிருந்து சிகிச்சைக்காக நிதி பெற்று தந்துள்ளதாகவும் கூறினார்.

2021ஆம் ஆண்டு வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு 5 அல்லது 6 அமைச்சர்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டால் மகிழ்ச்சி என்றும்,
கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும் கூறினார். தாங்கள் ஏற்கனவே தியாகிகளாக இருந்துள்ளோம் என்றும் 85 சீட்டுகள் வைத்திருந்த போது கூட, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் வெளியில் இருந்து ஆதரவு அளித்ததையும் குறிப்பிட்டார்.

செல்போன், லேப்டாப் இருக்கும் வரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மறக்க முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details