தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

234 தொகுதிகளிலும் போட்டி: இளைஞர் கட்சி அறிவிப்பு - தமிழ்நாடு இளைஞர் கட்சி

திருச்சி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிவித்துள்ளது.

Compete in all 234 constituencies said tamilnadu youth party
Compete in all 234 constituencies said tamilnadu youth party

By

Published : Oct 15, 2020, 3:57 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒருங்கிணைந்த இளைஞர்களால் தமிழ்நாடு இளைஞர் கட்சி உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லுாா் வளையூர் ஊராட்சி மன்ற தலைவருமான ரெங்கராஜ் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கட்சியை உருவாக்கி உள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம்.

இதுவரை எங்கள் கட்சியில் இரண்டு லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இளைஞர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றார்.

அப்போது மத்திய மண்டல தலைவர் கணேசன், மாவட்ட தலைவர் சாய் விக்னேஷ், வளையூர் ஊராட்சி மன்ற துணை தலைவரும் கட்சியின் துணை தலைவருமான கதிர்வேல், துணை பொருளாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: களைக்கட்டிய அலகுமலை ஜல்லிக்கட்டு கால்நடை சந்தை!

ABOUT THE AUTHOR

...view details