மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் ஆறாவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் தொடர் பேராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமருக்கு எதிராக சிபிஎம் கட்சியினர் சாலை மறியல்! - பிரதமருக்கு எதிராக சிபிஎம் கட்சி
திருச்சி: டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சிபிஎம் கட்சியினர் பிரதமர் மோடிக்கு பாடைகட்டி நூதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடிக்கு பாடை கட்டி நூதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர்.