திருச்சி புத்தூர் மந்தை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் நவீன் (18). இவர் திருச்சி தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று (செப்.5) காலை தனது நண்பர்களுடன் திருச்சி ஆட்சியர் அலுவலகம் பின்னால் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தண்ணீரில் இறங்கி உள்ளனர்.
திருச்சியில் நேற்று இரவு மழை பெய்ததால் வாய்க்காலில் நீர் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதை அறியாத நவீன் வழக்கம்போல் வாய்க்காலில் குளிக்க இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் வாய்க்கால் நீரில் சிக்கி தத்தளித்துள்ளார். நவீனை மீட்க நண்பர்கள் போராடியும் அவர்களால் முடியாமல் நவீன் தண்ணீரில் மூழ்கினார்.
தகவலறிந்த திருச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து வாய்க்காலில் குதித்து நாவீனை தேடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் நவீன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்த திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.