திருச்சி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்.
இந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று வழிபட்டார்.
நேற்று(அக்.7) திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாச்சியாரை துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இதையும் படிங்க: தருமபுரம் குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி