தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல்? மேயரிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்!

திருச்சி மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக மாமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி திமுக மேயரிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்!
திருச்சி திமுக மேயரிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்!

By

Published : Feb 1, 2023, 8:18 AM IST

திருச்சி திமுக மேயரிடம் வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்!

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (ஜன.31) நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன் மற்றும் மண்டலத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கான தேவையை முன்வைத்தனர். இந்த நிலையில் திருச்சி மாமன்ற சாதாரண கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், அதேநேரம் முறையாக நோட்டீஸ் விடாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வம் மாநகராட்சி மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பிற மாமன்ற உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டெண்டர் அறிவிப்பு தனக்கு தெரியவில்லை என 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை ஒருமையில் பேசினார். தொடர்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அனைத்து வார்டு டெண்டர்கள் அறிவிப்பையு,ம் அனைத்து கவுன்சிலருக்கும் தெரிவிக்க முடியாது என்ற தகவலையும் மேயர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திமுக 60வது வார்டு கவுன்சிலர் விஜய்யும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மேயரும் முத்துச்செல்வத்தை ஒருமையில் பேசினார். இவ்வாறு திமுக கவுன்சிலர்களே திமுக மேயரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சந்தைக்கடையாக மாறிய அரியலூர் கிராம சபை கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details