திருச்சி:கம்பத்திலிருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று மணப்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது,அதே நேரத்தில் பழனியில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
இதனைக் கண்டு கடுப்பான கம்பம் பேருந்து ஓட்டுநர், பழனி பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொதுவெளி என்றும் பாராமல் பழனி பேருந்து ஒட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசினார்.