தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: மத்திய, மாநில அரசுகளின் விரோத போக்கை கண்டித்து மணப்பாறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Citu Protest in Trichy
Citu Protest in Trichy

By

Published : Aug 10, 2020, 10:58 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொழிலாளர்கள் வாழ்வை நாசமாக்கும் கொள்கைகளை அமலாக்குவதாகக் கூறி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி. தங்கராசு, சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவர் எஸ்ம். ஷாஜகான் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details