தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிந்தா ரங்கராஜா - ஶ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத்தேரோட்டம்: விண்ணைப்பிளந்த கோஷம்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா நடைபெருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

trichy
ஶ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்

By

Published : Apr 19, 2023, 3:14 PM IST

ஶ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி:இந்தியாவில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது எனவும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வருடம்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர், பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும், பட்டித்தொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வாக சித்திரைத் தேரோட்ட விழா நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து நம்பெருமாள் அணிந்துகொள்வதற்காக பட்டு வஸ்திரம், கிளிமாலை மற்றும் சீர்வரிசை மங்கலப்பொருட்கள் போன்றவை நேற்று ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது.

இந்த ஆண்டு சித்திரைத்தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம் பெருமாள் திருக்கோயிலை வலம் வந்தார். இந்த தேர் திருவிழாவில் பங்கேற்க புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை போன்ற எண்ணற்ற மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனின் திருத்தேரைக் காண குவிந்து வருகின்றனர்.

ரங்க ராஜா - ரங்கபிரபு கோவிந்தா என்கிற கோஷம் முழங்க எழில்மிகு தேரில் பவனி வர உள்ளார், திருவரங்கன். இன்று சரியாக மாலை 6‌ மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற உள்ளது. மேலும் 4 வீதிகளிலும் தேர் வலம் வரவுள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்கருதி திருச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் சுமார் 700-க்கு அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள், அறநிலையத்துறை ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏப்.25 முதல் பயன்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலைய புதிய முனையம்!

ABOUT THE AUTHOR

...view details