தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணன் வேடத்தில் சிறு குழந்தைகள்! - திருச்சி

திருச்சி: பரதநாட்டிய மாணவர்கள் கண்ணன், ராதை போல் வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

Krishna jayanthi

By

Published : Aug 22, 2019, 8:42 PM IST

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியில் ஸ்ரீரங்கம் நாட்டியாலயா என்ற பரதநாட்டிய பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரதநாட்டியம் பயின்றுவருகின்றனர். கலைமாமணி விருது பெற்ற ரேவதி முத்துசாமி இப்பள்ளியை நடத்திவருகிறார்.

ஒவ்வொரு பண்டிகைதோறும் மாணவிகள் அதற்குரிய வேடமணிந்து கொண்டாடுவது வழக்கம். அந்தந்த பண்டிகைகளின் முக்கியத்துவத்தை மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சுமார் 50 மாணவிகள் கண்ணன், ராதை போல் வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

கண்ணன் வேடத்தில் சிறு குழந்தைகள்!

இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் பத்மஸி நர்சரி பள்ளி மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடினர். அப்போது, கிருஷ்ணரின் பகவத் கீதை பற்றி மாணவர்கள் கூறினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணர் விரும்பி சாப்பிடக்கூடிய வெண்ணையினால் தயார் செய்த திண்பண்டங்கள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details