தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்குள் இருந்த குழந்தை மீட்பு - தீவிர சிகிச்சை - baby thrown in bag

முசிறி அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தொட்டி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை
குழந்தை

By

Published : Dec 15, 2021, 1:40 PM IST

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே கட்டப்பை ஒன்று இருந்துள்ளது.

பையில் அசைவு தென்படவே அவ்வழியாகச் சென்ற மருத்துவமனை ஊழியர் பையைத் திறந்து பார்த்துள்ளார். அதில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள்கொடி ஈரம் கூட காயாத நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்துக்கு, ஊழியர் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து பணியிலிருந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை அளித்து பத்திரமாக இன்குபேட்டரில் வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிசிடிவி கேமரா, மருத்துவமனை வளாகத்திலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் பச்சிளங் குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மூங்கில் காட்டில் ஆண் குழந்தை கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details