குழந்தை பாதுகாப்புக்கான 24 மணிநேர இலவச தொலைபேசி எண் 1098 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிதிருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில், குழந்தை தொழிலாளர்கள், போதை பழக்கத்திற்குள்ளான குழந்தைகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள், குழந்தை கடத்தல், பெண் சிசுக்கொலை, பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 1098 என்ற இலவச எண் மூலம் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்வது குறித்து பறையடித்து நடனம் ஆடி இளைஞர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.