2019-2020ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை, மாநில அளவிலான பெண்கள் பிரிவு ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகிறது. இதனை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அவர்,
"தமிழ்நாட்டில் விளையாட்டினை மேம்படுத்தி தலைசிறந்த இளம் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்குகின்ற நோக்கத்தோடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியினை நடத்துவதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 8 கோடியே 19 லட்சம் தமிழ்நாடு அரசு செலவு செய்கிறது.
மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள் அரசு செலவில் கலந்துகொள்கிறார்கள். முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம் , இரண்டாம் பரிசாக ரூ. 75,000 , மூன்றாம் பரிசாக ரூ.50,000 என ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.