திருச்சி மணப்பாறை பேருந்துநிலையத்தில் தீபாவளி நாளன்று மூதாட்டி தனலெட்சுமியிடம், 4 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சுற்றித் திருந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திருச்சி வாளவந்தான் கோட்டையைச் சேர்ந்த கண்ணன் மகன் ரவி (எ) மாக்கான் ரவி, கல்லக்குறிச்சி அத்திப்பட்டியைச் சேர்ந்த நயினப்பன் மகன் மணி (எ) ராஜமாணிக்கம் என்பதும், இருவரும் தீபாவளி பண்டிகையின் போது மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் இருவர் கைது இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 சவரன் செயினை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவை அருகே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வரும் 80 வயது மூதாட்டி