தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: கைதிகள் விடுதலை - கரோனா நோய் பாதிப்பு

திருநெல்வேலி: கரோனா நோய் பாதிப்பு காரணமாக நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 167 விசாரணை கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சிறை கைதிகள் விடுதலை
மத்திய சிறை கைதிகள் விடுதலை

By

Published : Mar 25, 2020, 9:37 AM IST

கரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சிறை கைதிகள் விடுதலை

இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் பேரில் கரோனா தொற்று நடவடிக்கையாக சிறைவாசிகள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் சிறைச்சாலைகளில் உள்ள விசாரணை கைதிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 167 விசாரணை கைதிகள் இன்று அதிகாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிளை சிறைச்சாலைகளிலிருந்து 52 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞர்களின் குடும்பம் பட்டினி சாவை சந்திக்கும் - பிரதமருக்கு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details