திருச்சி:பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திருவிழாவின், திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் பகல்பத்து திருநாளின் 8ஆம் நாளான இன்று (டிச.30) காலை, நம்பெருமாள் முத்து குல்லா எனப்படும் ராஜமுடி கிரீடம் அணிந்து, வைர அபயஹஸ்தம், முத்துமாலை, ரத்தின மகர ஹண்டி, அடுக்கு பதக்கம் மற்றும் பின்புறம் பங்குனி உத்திர பதக்கம் மற்றும் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி, தங்கப் பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 8ஆம் திருவிழா உற்சவம் - Vaikunda Ekadasi 2023
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து 8ஆம் திருநாள் உற்சவத்தில், முத்து குல்லா எனப்படும் ராஜமுடி கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல்பத்து 8ஆம் திருவிழா உற்சவம்!
பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அரையர் சேவை எனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளினார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உற்சவம் கோலாகலம்