திருச்சி:மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர், ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர், சுப்பிரமணியன் (60). இவருக்கு ராஜா (45) என்ற மகன் உள்ளார்.
ராஜா கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை வெளிநாட்டிற்கு பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது.