திருச்சியில் உள்ளாட்சித் துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டனர்.
கடைமடைக்கு சென்றடைந்த காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி - Cauvery water
திருச்சி: மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதிக்கு சென்றடைந்ததை நேரில் சென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தினேன் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் பேசுகையில், 'மேட்டூரில் காவிரி அணை திறக்கப்பட்ட பின்னர் கல்லணையிலிருந்தும் திறக்கப்பட்டது. தொடர்ந்து வெண்ணாறு, காவிரி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று முன்தினம் காவிரி நீர் சென்றடைந்தது. இதனை நான் நேரில் சென்று ஆய்வு செய்து உறுதிப்படுத்தினேன். கடைமடை பகுதிகளில் விவசாயிகள் மலர் தூவி காவிரி நீரை வரவேற்றனர்’ என்றார்.