திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருச்சி மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, உதவி இயக்குநர் சந்துரு அறிவுரையின்படி மத்திய அரசின் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 1ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் சுதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மரவனூர், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று காலை ஆறு மணிமுதல் தடுப்பூசிகள் போடும் பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், "கால்நடை வளர்ப்பவர்கள் மூன்று மாதத்துக்கு மேல் வயதுள்ள கன்றுகள், சினைப் பசுக்கள், கறவைப் பசுக்கள், எருமைகள், எருதுகளுக்குக் கட்டாயம் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.