திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன். இவர் ஒரு குறிப்பிட்ட சமுதாய இன பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
குறிப்பிட்ட ஒரு சமுதாயப் பெண்களைத் தரக்குறைவாக பேசிய ஆடியோ விவகாரம்: திமுக மா.செ. மீது வழக்குப்பதிவு - DMK
திருச்சி: குறிப்பிட்ட ஒரு சமுதாயப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடியோ விவகாரம்
இது அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க, எதிர்க்கட்சியினர் பரப்பியதாக காடுவெட்டி தியாகராஜன் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த ஆடியோ கடந்த மார்ச் மாதம் பதிவுசெய்யப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆடியோ தொடர்பாக காடுவெட்டி தியாகராஜன் மீது திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Last Updated : Nov 18, 2020, 3:03 PM IST