திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் செப்டம்பர் மாதம் கடத்தப்பட்டார். அதன்பின் அவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காவல்துறையினரால் மீட்கப்பட்டார். அவரிடம் கோட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மலைக்கோட்டை அதிமுக பொருளாளர் வணக்கம் சோமு என்பவர் ஒருதலை காதல் காரணமாக இவரைக் கடத்தியது தெரியவந்தது.
பேராசிரியை கடத்தல் வழக்கு: தலைமறைவு குற்றவாளி சரண் - பேராசிரியை கடத்தல் வழக்கு
திருச்சி: கல்லூரி பேராசிரியை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த அதிமுக பிரமுகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
trichy-police-station
இந்தக் கடத்தல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், வணக்கம் சோமு தலைமறைவாக இருந்துவந்தார். இதற்கிடையில் அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து ஏழு மாதங்கள் தலைமறைவாகி இருந்த அவர் இன்று கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:ஆட்கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு - தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றக்கிளை!