திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் உள்ளாட்சி அமைப்புகள் , தோட்டக்கலை வேளாண் வணிகம் ஆகிய துறைகள் சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைத் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் இன்று (மே 24) நடைபெற்றது.
மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் வேறு எந்தப் பணியையும் பார்க்காமல், கரோனா தொற்றை ஒழிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகிறார். கரோனா நோயாளிகளுக்கு நாள்தோறும் புதிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.