திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வயலூர் அருகே எட்டரை கோப்பு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே கூறுகையில், " கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக ஸ்டாலின் தேர்தலை சந்திக்கிறார். இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதா இல்லாமல் அதிமுக தேர்தலை சந்தித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகாலமாக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் மீது எந்தக் குறையையும் யாராலும் கூற முடியவில்லை. அவர் மீதான எதிர்மறை கருத்துகளும் இல்லை.