திருச்சி: மணப்பாறை அடுத்த பழையகாலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மகன் சந்தோஷ் குமார். இவர் கடந்த மூன்று வருடங்களாக சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வழக்கம்போல் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீடியோ எடுக்கும் பணிக்காக கேமராவை எடுத்துச்செல்ல கடைக்கு வந்த சந்தோஷ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பல லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.