திருச்சி: லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் மாதவன் (45). இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வந்தார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 1/2 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. கோயில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை நடைப்பயிற்சி சென்ற மாதவனை அடையாளம் தெரிய நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.