தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் பிரமாண்ட பேரணி - 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன பேரணி

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பிரமாண்ட கண்டன பேரணி நடத்தினர்.

caa protest
caa protest

By

Published : Jan 26, 2020, 10:21 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல டெல்லியிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தையிலிருந்து கோர்ட், வெஸ்டரி பள்ளி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

CAA against protest

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் குலாம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பெரியார் பகுத்தறிவு பகலவன்... ரஜினி அதைத் தவிர்த்திருக்கலாம் - ராமதாஸ் கருத்து

ABOUT THE AUTHOR

...view details