தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த பேருந்தை திருடிய உரிமையாளர் கைது

திருச்சி: தனது சொந்த பேருந்தை திருடி காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமையாளர் கைது

By

Published : Jul 10, 2019, 7:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது சகோதரர் சுயம்பு. இவர்கள் இருவரும் இணைந்து சொந்தமாக ஸ்ரீ பாலாஜி சர்வீஸ் என்ற பெயரில் ஆம்னி பேருந்து இயக்கி வந்தனர். இந்த பேருந்து தினமும் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் உமா சக்தி தலைமையில் அதிகாரிகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சுயம்பு

அப்போது இந்த ஆம்னி பேருந்தை சோதனையிட்டபோது பேருந்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும், சாலை வரி செலுத்தாமல் ஆம்னி பேருந்தை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த இந்த ஆம்னி பேருந்தை திருடிச் சென்றுவிட்டனர்.

உரிமையாளர் கைது

இதுகுறித்து திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பேருந்தை தேடி வந்தநிலையில், அருப்புக்கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்த பேருந்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுயம்புவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த பேருந்தை சுயம்புவும், அவரது சகோதரர் ராமலிங்கமும் இணைந்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சுயம்புவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராமலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

சொந்த பேருந்தையே அதன் உரிமையாளர் திருடி சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details