திருச்சி: துவரங்குறிச்சி போக்குவரத்து பணிமனை மேலாளர் மகேந்திரன் (52). இவர் தன்னை தாக்கியதாக அதே பணிமனையில் பேருந்து ஒட்டுநராக பணியாற்றும் பாலாஜி (46) என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஓட்டுநர் பாலாஜி மீது துவரங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.