புதுக்கோட்டையிலிருந்து - துவரங்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து திருச்சி மாவட்டம்,மணப்பாறை அடுத்த வடக்குப்பட்டி பிரிவு சாலை அருகில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பேருந்தினுள் உள்ளே சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணப்பாறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் காயம்! - 20 பேருக்கு காயம் ஏற்பட்டது
திருச்சி : தனியார் பேருந்து நள்ளிரவில் மணப்பாறை அடுத்த வடக்குப்பட்டி பிரிவு ரோடு அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
bus accident in manaparai
இதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,இந்த விபத்தினால் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு