தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாவதியாகாத மாத்திரைகளை தீ வைத்து எரித்த போது விபத்து; அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு - மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மையம்

மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகள் காலாவதியாகத போதிலும் அதனை தீயிட்டு எரித்தபோது, ஒப்பந்த பணியாளர் தீப்பிடித்து எரிந்ததில் 60 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharat மாத்திரைகளை தீயிட்டு எரித்த போது உடலில் பற்றிய தீ
Etv Bharat மாத்திரைகளை தீயிட்டு எரித்த போது உடலில் பற்றிய தீ

By

Published : Jun 27, 2023, 4:39 PM IST

Updated : Jun 30, 2023, 5:55 PM IST

திருச்சி:தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேங்கும் மருத்துவ கழிவுகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளையும் முறைப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சில தனியார் மருத்துவமனைகள் இது போன்ற அரசு உத்தரவுகளை மதிக்காமல் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அகற்றி, அதனால் அபராதம் செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய இரும்புச் சத்து மாத்திரைகள் இருந்துள்ளன. அவற்றை தீயிட்டு எரித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் பழைய வளாகத்தில், நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக மரவனூரைச் சேர்ந்த கலையரசன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், மாத்திரைகளை தீயிட்டு எரித்துள்ளார்.

அப்போது மாத்திரைகள் வெடித்து சிதறியதில், திடீரென அவரது உடையில் தீப்பற்றியுள்ளது. கலையரசன் அங்கிருந்து மருத்துவமனை முன் பகுதிக்கு ஓடிச்சென்றார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட கலையரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அவசர பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

கலையரசன் 60 விழுக்காடு தீக்காயமடைந்திருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மாத்திரைகளை எரிக்கும்போது ஒப்பந்த தொழிலாளி தீக்காயமடைந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இந்நிலையில் 12/2024 வரை கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய FERROUS SULPHATE AND FOLIC ACID எனும் இரும்புச் சத்து மாத்திரைகள் பெட்டி பெட்டியாக, எரிந்த இடத்தில் கிடந்தது.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பயன்படுத்தக் கூடிய சத்து மாத்திரைகளை முன் கூட்டியே எரித்தது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் எரிக்கப்பட்டது? எரிக்கும் போது தொழிலாளியின் உடலில் தீ பற்றியது எப்படி? பாதுகாப்பு உபகரணங்கள் எரிந்ததன் பின்னணி என்ன? அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கழிவுகளை அகற்றும் வாகனங்கள் மூலம் காலாவதியான மருந்துகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும் என்ற அரசு உத்தரவு நிலையில் தன்னிச்சையாக எதனால் எரிக்கப்பட்டது? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கலையரசன் நேற்று (ஜூன் 29) மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, கலையரசனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற கலையரசன், உடல் தீப்பிடித்து எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகள் இவ்வாறு தான் அழிக்கப்படுகின்றனவா என்பது குறித்து அமைச்சர் தரும் விளக்கம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:5 ஆண்டுகளாக டிமிக்கி - டெல்லியில் மடக்கிப் பிடித்து கைது செய்த கொரட்டூர் போலீஸ்!

Last Updated : Jun 30, 2023, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details